இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது ஊடகவியலாளர்களை நோக்கி நடுவிரலை காட்டி ஆபாச சைகை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வாலுக்கும் சியாவுக்கும் வரும் நவம்பரில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தனது காதலன் சேதன் சௌத்ரியுடன் சேர்ந்து சியா இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சியாவின் இந்த அநாகரிகமான செயல் மற்றும் செய்த குற்றத்திற்காகச் சிறிதும் குற்ற உணர்ச்சியற்ற அவரது மனநிலை சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், லோஹாகட் கோட்டையின் செங்குத்துப் பாறையிலிருந்து கேதனை எப்படிக் கீழே தள்ளிப் படுகொலை செய்வது என்பது குறித்து சியாவும் சேதனும் முன்கூட்டியே ஒத்திகை பார்த்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதத்தில், லுல்லாநகர் அருகிலுள்ள ஒரு குன்று பகுதியில் இதற்கான ஒத்திகையை அவர்கள் நடத்தியுள்ளனர். சமீபத்தில் விசாரணைக்காக அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சியா, தாங்கள் ஒத்திகை பார்த்த துல்லியமான இடத்தை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டியுள்ளார். இந்த திட்டமிட்ட படுகொலைக்கான கூடுதல் ஆதாரங்களையும், துல்லியமான தேதிகளையும் சேகரிக்கும் பணியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த இரு குற்றவாளிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி புனே ஊரகக் காவல்துறை வட்கான் மவல் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதற்கிடையே, இறப்பதற்கு முன்னதாகவே சியா மற்றும் சேதனின் அதிக்கப்படியான நெருக்கம் குறித்து கேதன் தனது தந்தையிடம் அச்சத்தையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியதாக அவரது தந்தை விஷால் அகர்வால் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். தங்களின் காதலுக்குத் தடையாக இருந்ததால் கேதனைக் கொன்றதாகக் குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நீதிமன்ற சம்மதத்துடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
ஜான்சி மாவட்டம் சிர்கானா காவல் எல்லைக்குட்பட்ட சிச்சோரா கிராமத்தைச் சேர்ந்த ராம்தீன், மகன்கள் இல்லாததால் தனது பேத்தி கஞ்சனைச் சொந்த…
பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி…
செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…
சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…