பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 1,871 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இதில் இடம் பெற்றுள்ளது.
ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.
இந்த அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானssc.gov.in மூலம் வரும் செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…