“முதலமைச்சர் 3 நாள் வாய்தா வாங்கிட்டாரு”…. “சொரணை வந்துடுச்சா?”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி….!

Spread the love

சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் கழக அயலக அணி தலைவருமான கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ். பாரதி, தமிழகத்தில் தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு கடுமையாகச் சீரழிந்துள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

மக்கள் தங்களின் உரிமைகளை உணராமல் “மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல” மயக்க நிலையில் இருப்பதாகச் சாடிய அவர், மின்கட்டண உயர்வைப் பார்த்த பிறகே மக்களுக்குச் சற்று சொரணை வந்துள்ளதாகத் தெரிவித்தார். முந்தைய திமுக ஆட்சிக்காலங்களில் குடிநீர் போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், பெரம்பூரில் கட்டிக் கொடுக்கப்பட்ட ஏசி பேருந்து நிலையம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள், தற்போது உரிய முறையில் பராமரிக்கப்படாமல் கஞ்சா போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறியுள்ளதை வேதனையுடன் பதிவுசெய்தார்.

சட்டமன்ற விவாதங்கள் குறித்துப் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல் முதலமைச்சர் மூன்று நாட்கள் வாய்தா வாங்கிச் சென்றுள்ளதாக விமர்சித்தார். மேலும், மிசா சட்டத்தின் கீழ் தியாகம் செய்த தலைவர்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், பெண் காவல் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதையும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வையும் சுட்டிக்காட்டினார். இருப்பினும், வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி நமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

முன்னதாக, சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனைத் தோற்கடித்த மக்களுக்கு “நல்ல சாவே வராது” என ஆர்.எஸ். பாரதி சாபமிடும் வகையில் பேசியது பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, பொதுமக்களை ஒட்டுமொத்தமாக மயக்கத்தில் இருப்பதாக உருவகப்படுத்தி அவர் பேசியுள்ள தற்போதைய பேச்சு, அரசியல் களத்தில் மீண்டும் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

38 seconds ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

8 minutes ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

14 minutes ago

நானும் டாக்டர் தான்… கான்பூரில் அரசு மருத்துவமனையில்… ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த பகீர் கூத்து… சோஷியல் மீடியாவில் வைரல் வீடியோ…!

கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் மருத்துவர் போல நடித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து…

15 minutes ago