தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக சுமார் ₹180 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாகவும், இதனை ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனம் மூலமாக அவர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து, ரகசியமாக இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தவெக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசியதாக இதுவரை 8 பேர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சதியின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்துடனான தொடர்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், தமிழக அரசியல் களம் தற்போது பெரும் கொந்தளிப்பான சூழலைச் சந்தித்துள்ளது.
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…
தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…
சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…