அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி ஒருவர், தனது கூட்டாளிகளை வரவழைத்து மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் கிழக்கில் உள்ள ஜானகி குளோபல் மருத்துவமனைக்கு சோனு என்ற நபர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு ஊசி மற்றும் குளுக்கோஸ் மூலம் வழக்கமான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துள்ளனர்.

சிகிச்சைக்கான மொத்த கட்டணம் ₹2,000 ஆக இருந்த நிலையில், மனிதநேய அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் அதனை ₹1,500 ஆகக் குறைத்துள்ளது. இருப்பினும், இந்த சலுகையை ஏற்றுக் கொள்ளாத நோயாளி, பணத்தைச் செலுத்தாமல் சாக்குப்போக்கு கூறத் தொடங்கியுள்ளார். முதலில் ‘ஜிபே’ (GPay) மூலம் ஆன்லைனில் பணம் அனுப்புவதாகக் கூறிய அவர், பின்னர் தனது நண்பர் கீழே பணத்துடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மருத்துவமனை ஊழியர்கள் அவருடன் கீழே சென்றபோது, அங்கு இரும்புக் கம்பிகள் மற்றும் குச்சிகளுடன் காத்திருந்த கும்பல் திடீரென மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலில் டாக்டர் அசோக் உட்பட பல மருத்துவமனை ஊழியர்கள் படுகாயமடைந்தனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வன்முறை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Visaka

Recent Posts

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

8 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

15 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

53 minutes ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

1 மணத்தியாலம் ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

2 மணத்தியாலங்கள் ago