தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பீமாரத்தைச் சேர்ந்தவர் சாம்பையா (62). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் இவரது இளைய மகன் சரத் என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் மிக விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. புதிய மருமகளை வீட்டிற்குள் வரவேற்ற மகிழ்ச்சியிலும், திருமணக் கொண்டாட்டங்களின் உவகையிலும் அந்த குடும்பத்தினர் அனைவரும் மூழ்கியிருந்தனர்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சாம்பையாவும், அவரது புதுமாப்பிள்ளை மகன் சரத்தும் தங்களது வீட்டின் மாடிக்கு ஏறிச் சென்றனர். அப்போது எதிர்பாராத வகையில் தந்தை சாம்பையா அங்கு சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சார வயரை எதிர்பாராமல் தொட்டுவிட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் சரத், தன் தந்தையைக் காப்பாற்ற பதறியடித்துக்கொண்டு ஓடினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரும் மின்சார வயரைத் தொட்டதால், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளையும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்த சோக சம்பவம் அந்தப் பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…