“பழிவாங்கும் வெறி.. 35 நிமிடங்கள்… 6 கொலைகள்”…. தெலங்கானாவை உலுக்கிய நரவேட்டையின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை….!

Spread the love

தெலங்கானா மாநிலம் ரங்கரெட்டி மாவட்டம் ஷாபாத் பகுதியில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான நரவேட்டை அரங்கேறியுள்ளது. போக்சோ (POCSO) வழக்கில் சிக்கி சமீபத்தில் முன்ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் (35) என்ற வாலிபர், பழிவாங்கும் வெறியுடன் ஒரே இரவில் தன் மனைவி, இரு குழந்தைகள் மற்றும் தன் மீது புகாரளித்த சிறுமி உட்பட மொத்தம் 6 பேரை வெறும் 35 நிமிடங்களில் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சொல்லொணா சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம், டவுன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ராஜ்குமார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவர், தன் மீது புகார் அளித்தவர்கள் மீதும், தனது குடும்பத்தின் மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று இரவு சரியாக 10.45 மணியளவில் காரில் புறப்பட்ட ராஜ்குமார், நேராக அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். கதவைத் திறந்த சிறுமியின் தாயையும், தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டியையும் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். அங்கிருந்த மாற்றுத்திறனாளி சகோதரியை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டும் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, அருகில் உள்ள ஏரிக்கரையில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை வீசியுள்ளார்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, இரவு 11.20 மணியளவில் ராஜ்குமார் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அங்கு வீட்டில் ஆழமான உறக்கத்தில் இருந்த தனது காதல் மனைவி பார்வதி சரிதா (30) மற்றும் 4 வயது, 1 வயது மதிக்கத்தக்க தனது இரு பிஞ்சு மகன்களையும் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாகத் தீர்த்துக் கட்டியுள்ளார். வெறும் 35 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து 6 உயிர்களைப் பறித்த ராஜ்குமார், உடனடியாகத் தனது தந்தைக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, “நான் மொத்தம் 6 பேரை கொலை செய்துவிட்டேன், இனி நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” எனக் கூறிவிட்டு காரில் தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தலைமறைவாக உள்ளாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவரைக் கைது செய்யக் காவல் துறை தரப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018-ல் காதலித்துத் திருமணம் செய்து, கைக்குழந்தையை இழந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள், கணவனின் வக்கிர புத்தியால் ஒரு குடும்பமும், பாலியல் புகாரளித்த சிறுமியின் குடும்பமும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

2 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

2 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

2 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

2 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

3 மணத்தியாலங்கள் ago