அய்யோ… தூங்காதே தம்பி தூங்காதே… வகுப்பறையில் ஆசிரியர் கும்பகர்ண தூக்கம்… மொபைல் போனில் மாணவர்கள்… அரசுப் பள்ளியில் அரங்கேறிய கூத்து… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் உமார்தா ஒன்றியத்தில் உள்ள சிக்ரோரி ஒருங்கிணைந்த அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பு நேரத்தில் வகுப்பறையிலேயே நிம்மதியாகத் தூங்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடமை நேரத்தில் பாடமெடுக்க வேண்டிய ஆசிரியர் தூங்கிக் கொண்டிருக்க, வகுப்பறையில் இருந்த சிறுவர்கள் படிப்பைக் கவனிக்காமல் கைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளிக்கூடத்தை வெறும் ஓய்வெடுக்கும் இடமாக ஆசிரியர் மாற்றியதும், அவருக்கு அச்சமின்றி மாணவர்கள் வகுப்பறையிலேயே மொபைல் போன்களைப் பயன்படுத்தியதும் அரசுப் பள்ளிகளின் நிலையைக் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. ஆசிரியரின் இந்த பொறுப்பற்ற செயலால் மாணவர்களின் எதிர்காலமும், கற்றல் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

https://twitter.com/priyarajputlive/status/2084479438058926497/video/1

இச்சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் செயல்பாடு குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. கல்வித்துறையின் அலட்சியப்போக்கைச் சுட்டிக்காட்டும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தைச் சீரமைக்க உரிய வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Swetha

Recent Posts

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…

4 minutes ago

“அட கொடுமையே… அனாதைன்னு நம்பி பொண்ணு கொடுத்த குடும்பம்… கணவரின் போனை பார்த்த… மனைவிக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான போலி பின்னணி…!”

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில்…

11 minutes ago

ஐயோ பாவம்… தெருவில் நடந்த சிறுமி மீது சாய்ந்த மின்கம்பம்… நொடியில் பறிபோன உயிர்… உ.பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு…

25 minutes ago

ஷாக்… உதயநிதி நாளை சட்டசபை வரக்கூடாது?… CM விஜய் மேஜைக்கு வந்த… ரகசிய உளவுத்துறை ரிப்போர்ட்… பின்னணி என்ன?…

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…

9 மணத்தியாலங்கள் ago

அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…

9 மணத்தியாலங்கள் ago

போயிட்டு வரேன்… கிருத்திகாவுக்கு சைகை… இன்பநிதியை கட்டி அணைத்த உதயநிதி… நீலாங்கரை வீட்டில் நடந்த உருக்கமான நிமிடங்கள்…!

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர்.…

9 மணத்தியாலங்கள் ago