அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றியமைத்தது. கோவை பிரியாணியின் தனித்துவமான சுவை, நறுமணம் மற்றும் மசாலாப் பொருட்களின் சேர்க்கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர், இந்தச் சுவையைத் தனது சொந்த நாடான ஜப்பானிய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்தார்.

இந்த சுவை அனுபவத்தைத் தொடர்ந்து, பிரியாணி செய்யும் முறையை முறைப்படி கற்றுக் கொண்ட ஒசாவா, ஜப்பான் திரும்பியதும் டோக்கியோவில் தென்னிந்தியப் பாணி பிரியாணிக்கான பிரத்யேக உணவகம் ஒன்றைத் தொடங்கினார். தமிழகத்தின் பாரம்பரிய முறையில், சீரகச் சம்பா அரிசி மற்றும் நறுமண மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி, அதன் அசல் சுவை மாறாமல் ஜப்பானியர்களுக்கு பிரியாணி சமைத்துப் பரிமாறினார். இதனால் அவரது உணவகம் குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

உணவின் தரம், மாறாத பாரம்பரிய சுவை மற்றும் அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, இவரது உணவகத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘மிச்செலின்’ அங்கீகாரம் கிடைத்தது. கோயம்புத்தூரில் சுவைத்த ஒரு தட்டு பிரியாணியின் மூலம் ஈர்க்கப்பட்டு, இன்று ஜப்பானில் தென்னிந்திய உணவுப் கலாச்சாரத்தைப் பரப்பி மிச்செலின் விருது வரை சாதனை படைத்த தகமாசா ஒசாவாவின் பயணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Swetha

Recent Posts

ED என்ட்ரி…. ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழலில் அடுத்தடுத்து சிக்கப்போகும் புள்ளி?…. பரபரப்பு கிளப்பும் ஆவணங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்…

4 minutes ago

“விஜய் அரசுக்கு ஆபத்து?.. 5 வருஷம் நீடிக்குமா தெரியல”…. ஆளுங்கட்சிக்கு ஷாக் கொடுத்த கே.பாலகிருஷ்ணன்…. அடுத்த பரபரப்பு…!

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி…

9 minutes ago

“கொஞ்சம் வெளியே வாங்க…” நைசாக பேசி அழைத்த 2 பெண்கள்… பகலில் கோர்ட் வாசலில் சபதம்… அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்…!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

24 minutes ago

ஃபுல் போதை…! கள்ளக்காதலால் பறிபோன பிஞ்சு உயிர்… மகனை துடிதுடிக்க கொன்ற போதை ஆசாமி… கதறும் தாய்… கோயம்பேட்டை உலுக்கிய கொலை…!!

சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…

30 minutes ago

சென்னைக்கே பெரிய அதிர்ச்சி…. 36 வருட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி… ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி….!

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…

34 minutes ago

9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்… 69 முறை அடித்த போன் கால்… கையில் இருந்த ஒரே ஒரு டாட்டூ… ஆந்திராவை உலுக்கிய கல்யாணி மரணம்… பின்னணியில் பகீர்…!!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம்…

40 minutes ago