9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்… 69 முறை அடித்த போன் கால்… கையில் இருந்த ஒரே ஒரு டாட்டூ… ஆந்திராவை உலுக்கிய கல்யாணி மரணம்… பின்னணியில் பகீர்…!!

Spread the love

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண், மங்களகிரியில் பணிபுரிந்தபோது கௌஸ் முகைதீன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். வறுமை காரணமாகவும், மகனை வளர்க்க சிரமப்பட்டதாலும், ஆண் குழந்தை தேவைப்பட்ட தனது உறவினரான ஷபிக் என்பவருக்கு அந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு கல்யாணி விற்றுள்ளார்.

குழந்தையை விற்றதன் மூலம் ஷபிக்குடன் கல்யாணிக்குத் தொடர்பு அதிகமாகி, அது நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதற்கிடையே, குழந்தையை விலைக்கு வாங்கிய விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டி ஷபிக்கிடம் கல்யாணி அடிக்கடி பணம் பறிக்கத் தொடங்கினார். இந்த தொடர் மிரட்டல்களால் கடும் ஆத்திரமடைந்த ஷபிக், கல்யாணியைக் கொலை செய்யத் திட்டமிட்டு செப்டம்பர் 17 அன்று அவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துக் கத்தியால் குத்திக் கொன்றார். பின்னர் அவரது உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி இப்ராஹிம்பட்டினம் பகுதியில் உள்ள கால்வாயில் வீசியுள்ளார்.

மறுநாள் கால்வாயில் மனித உடல் பாகங்கள் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஆரம்பக்கட்ட விசாரணையில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், வெட்டுண்ட கையில் இருந்த ‘டாட்டூ’ புகைப்படத்தை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதனைப் பார்த்த கல்யாணியின் தம்பி, அது தனது அக்காவின் கைதான் என அடையாளம் காட்டினார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஷபிக்கின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று கல்யாணிக்கு அவர் 69 முறை போன் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 அன்று கைது செய்யப்பட்ட ஷபிக், காவல்துறை விசாரணையில் தனது குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டார்.

Gayathri

Recent Posts

“3 பிள்ளைகள் இருந்து என்ன பயன்…?” பள்ளி மதிய உணவை சாப்பிட்டு பசியை போக்கிய தம்பதி… “அதிகாரிகளிடம் கெஞ்சி…” சோகத்தில் உயிரை விட்ட தம்பதி…. வைரலாகும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா…

1 minute ago

உஷார்..! ரேஷன் கார்டு இருக்கா?… அரசு கொடுத்த கடைசி 90 நாள் கெடு… தப்பிக்க ஒரே வழி இதுதான்… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி குடும்ப அட்டைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல்…

5 minutes ago

GPay, PhonePe_க்கு குட்பை?… நாளை முதல் வேலை செய்யாதா? வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு… டிஜிட்டல் இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி….!!

மத்திய அரசின் புதிய யுபிஐ பரிவர்த்தனை கட்டண விதிமுறைகளை எதிர்த்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும்…

16 minutes ago

வேற லெவல்…! 14 ஜோடிகள்… ரூ.5 லட்சம் சீர்வரிசை… குடும்பங்களுக்குக் கிடைச்ச புது வாழ்க்கை… வாயடைச்சு நின்ன அசல் ட்விஸ்ட்…!!

திருச்செந்தூர் அருகே தாமிரபரணி நதி கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில், ஏழ்மை நிலையில் உள்ள 14 ஜோடிகளுக்கு…

27 minutes ago

நடுவானில் துப்பாக்கிச் சூட்டையும் மீறிய கோரத்தாக்குதல்…. “39 வயசு.. 2 குழந்தைங்க இருக்கு சார்”…. கதறிய இந்திய பைலட்…. பரபரப்பு பின்னணி…..!

துபாய் - டெல் அவிவ் இடையிலான ‘ப்ளைதுபாய்’ விமானத்தில் அரங்கேறிய நடுவானில் கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி, இந்திய பைலட்…

32 minutes ago