ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது. தேனி மாவட்டம், போடி தாலுகாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், மூன்றாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது, ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கிப் பழகியுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட செல்வம், வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியைப் பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தக் கொடுமையின் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வத்தைக் கைது செய்தனர். தொடர்ந்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ். எழில் தீர்ப்பு வழங்கினார். அதில், செல்வம் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளியைப் பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள லாங்லி பகுதியில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி இரவு தீப்பிடித்து எரிந்த காருக்குள் 25…