தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது சட்டவிரோத மணல் குவாரி முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ஆற்றுப்படுகைகளில் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் 28 மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏச்சம்பாடி, கண்டனேரி, மாதவம்பெருமாள் கோயில் மற்றும் ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி, ஆழம் மற்றும் பரப்பளவு வரம்புகள், டிஜிட்டல் விற்பனை நடைமுறைகள் ஆகியவை மீறப்பட்டிருப்பதாகவும், இதில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் முன்னாள் தலைமைப் பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி உட்பட 28 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கே.என். நேரு ஆகியோர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதும் இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருப்பது அக்கட்சிக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…