“ஸ்கிரிப்ட் கொஞ்சம் ஓவரா போயிடுச்சோ?”… சத்யபாமா அழுகை.. இணையத்தை சூறையாடும் மீம்ஸ்கள்…. பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கா…?

Spread the love

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், தினமும் புதுப்புது திருப்பங்களுடன் அரசியல் சூட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வேட்பாளராகக் களம் காணும் சத்யபாமாவுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் நேற்று அங்கு பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காலம் காலமாக திராவிட கட்சிகளின் கோட்டையாகவும், குறிப்பாக இரட்டை இலை சின்னத்திற்கு வலுவான ஆதரவு தளமாகவும் திகழும் தாராபுரத்தில், விஜய்யின் வருகை தங்களுக்குப் பெரிய திருப்புமுனையைத் தரும் என்று தவெகவினர் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அந்தப் பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவங்கள் அனைத்தும் தற்போது அப்படியே தலைகீழாக மாறி தவெகவுக்கே பேக் ஃபயராக அமைந்திருக்கின்றன. விஜய்யின் உரையாடலுக்கு முன்பாக மேடையில் பேசிய சத்யபாமா, “திமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதால் தான் கட்சியை விட்டு வெளியே வந்தேன்; ஆனால் என்னை துரோகி என்றும், சமூக வலைதளங்களில் மிகவும் அசிங்கமாகவும் சித்தரிக்கிறார்கள்” என்று கூறி மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது உடனே குறுக்கிட்ட தவெக தலைவர் விஜய், அவரை நேரில் தேற்றி ஆறுதல் கூறினார்.

இந்தச் சம்பவம் தவெகவுக்கு ஆதரவான அலையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய அரசியல் ஆயுதமாகக் கிடைத்துவிட்டது. சத்யபாமா பேசிக் கொண்டிருந்தபோதே மேடையிலிருந்த நிர்வாகி ஒருவர் அவரது காதில் ஏதோ ரகசியம் சொல்ல, அதன்பின்னரே அவர் அழுது பேச்சை மாற்றியதாகக் கூறி, இது முழுக்க முழுக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ‘நாடகம்’ என திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சத்யபாமாவின் அழுகையும், அதற்கு விஜய் கொடுத்த ரியாக்ஷனும் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

விஜய்யின் பிரச்சாரத்தைக் கொண்டு வாக்கு சேகரிக்கலாம் என்று நினைத்த தவெகவுக்கு, இந்த ‘கண்ணீர் காட்சி’ பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் அரசியலில் பேசப்படுகிறது. இயல்பான பிரச்சாரமாக முடிந்திருக்க வேண்டிய கூட்டத்தை, அழுகை நாடகமாக மாற்றி தவெகவினரே தங்கள் கைப்பட கெடுத்துக் கொண்டதாக தாராபுரம் தொகுதி மக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் இதைத் தீவிர பிரச்சார ஆயுதமாக எடுத்துள்ளதால், தாராபுரம் இடைத்தேர்தல் களம் தவெகவுக்கு மேலும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.

Nanthini

Recent Posts

உஷார்..! ரேஷன் கார்டு இருக்கா?… அரசு கொடுத்த கடைசி 90 நாள் கெடு… தப்பிக்க ஒரே வழி இதுதான்… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி குடும்ப அட்டைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல்…

3 minutes ago

GPay, PhonePe_க்கு குட்பை?… நாளை முதல் வேலை செய்யாதா? வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு… டிஜிட்டல் இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி….!!

மத்திய அரசின் புதிய யுபிஐ பரிவர்த்தனை கட்டண விதிமுறைகளை எதிர்த்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும்…

14 minutes ago

வேற லெவல்…! 14 ஜோடிகள்… ரூ.5 லட்சம் சீர்வரிசை… குடும்பங்களுக்குக் கிடைச்ச புது வாழ்க்கை… வாயடைச்சு நின்ன அசல் ட்விஸ்ட்…!!

திருச்செந்தூர் அருகே தாமிரபரணி நதி கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில், ஏழ்மை நிலையில் உள்ள 14 ஜோடிகளுக்கு…

24 minutes ago

நடுவானில் துப்பாக்கிச் சூட்டையும் மீறிய கோரத்தாக்குதல்…. “39 வயசு.. 2 குழந்தைங்க இருக்கு சார்”…. கதறிய இந்திய பைலட்…. பரபரப்பு பின்னணி…..!

துபாய் - டெல் அவிவ் இடையிலான ‘ப்ளைதுபாய்’ விமானத்தில் அரங்கேறிய நடுவானில் கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி, இந்திய பைலட்…

29 minutes ago

ED என்ட்ரி…. ரூ.100 கோடி பள்ளி அங்கீகார ஊழலில் அடுத்தடுத்து சிக்கப்போகும் புள்ளி?…. பரபரப்பு கிளப்பும் ஆவணங்கள்…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்…

35 minutes ago