அவதார் படத்தையே மிஞ்சும் அளவிற்கு VFX.. ஹாலிவுட் படத்தை விட மிக பிரம்மாண்டமாக வெளியான சூர்யாவின் கங்குவா Teaser..

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவரின்  மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.


இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மற்றும் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி.மாரிமுத்து, தீபா வெங்கட், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ். அவினாஷ், விதார்த், பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

   


ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது.இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு 80 கோடிக்கும் விற்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி youtube தளத்தில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வெளியாகி சில அந்த நேரங்களில் நல்ல வரையறுப்பு கிடைத்து பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.

ஹாலிவுட் தோற்க்கும் அளவிற்கு VFX, CG மூலம் மிகப் பிரம்மாண்டமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்று இந்த டீசர் மூலம் தெரிய வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டவர் கமல்ஹாசன் மருதநாயகத்தையே விழுங்கும் அளவிற்கு இப்படத்தின் வேலைகள் மேக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar