விஜய் டிவி சீரியல் ஜோடிக்கு கல்யாணமா..? அவர்கள் வெளியிட்ட ஹல்தி புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

By Mahalakshmi on மே 13, 2024

Spread the love

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு சீரியல்கள் முடிவுக்கு வந்தது. அதில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிந்த பிறகு அதற்கு பதிலாக ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் பதிவிட்டுள்ள ஹல்தி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் ஹீரோவாக திரவியம் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் கதாநாயகனாக நடித்த வருகிறார்.

   

 

மூன்று சகோதரர்களைப் பற்றிய குடும்பத்தின் கதையாக இந்த சீரியல் உருவாகின்றது. இதில் திரவியம் அர்ஜுன் என்கின்ற கதாபாத்திரத்திலும், சுகேஷ் அஜய் என்கின்ற கதாபாத்திரத்திலும், கண்ணன் அவிநாசாகவும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் அஜய் என்கின்ற சுகேஷ்-க்கு  ஜோடியாக ஆர்த்தி சுபாஷ் நடிக்கின்றார்.

இந்தியில் ஒளிபரப்பாகி ஹிட்டான கஹானி கர் கர் கி என்ற சீரியலின் ரீமேக் தான் இந்த சீரியல் எனக் கூறப்படுகின்றது. சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் இவர்களுக்கு சீரியல் படி ஹெல்தி கொண்டாடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை ஆர்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்ததை பார்த்த பல ரசிகர்கள் உண்மையில் உங்களுக்கு திருமணமாக போகுதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் நடிகை ஆர்த்தி சுபாஷும் நடிகர் சுகேஷும் சீரியல் தான் திருமணம் செய்யப் போகிறார்கள். திருமண கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை தான் ஆர்த்தி சுபாஷ் பதிவிட்டு இருக்கின்றார். அது வெறும் ஃபோட்டோ ஷூட் தான் என்பதை அறியாத பலரும் ஆர்த்தி இடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.