கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் கவின் பட நடிகை.. மொத்தமாக ஆஜரான தமிழ் ரசிகர்கள்.. கிளாமர் பிக்ஸ்..!

By Mahalakshmi on வைகாசி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கவின் இயக்கத்தில் கடந்த 10-ம் தேதி வெளியான திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படத்தை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக சுரபி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அதிதி போங்கர்.

   

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 2014 ஆம் ஆண்டு வெளியான லாரி புகாரி என்ற மராத்தி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் அதிதி போங்கர்.

   

 

2017 ஆம் ஆண்டு அதர்வா நடித்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் சரோஜாதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் தான் இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் வெப் சீரிஸ்களில் களம் இறங்கினார்.

2020 ஆம் ஆண்டு வெளியான ஷீ வெப் சீரிஸில் படு கிளாமராக நடித்திருப்பார் .போலீஸ் கான்ஸ்டபிள்-ஆன இவர் விபச்சாரியாக நடித்து போதை பொருள் கடத்தல் தலைவன் நாயக் என்பவரை பிடிப்பதற்காக எல்லை மீறிய கவர்ச்சியில் இந்த சீரியஸில் இவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஸ்டார் திரைப்படத்தில் ஹீரோயினியாக தமிழில் பிரபலமாகி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் தாராளமாக கிளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கிடக்கிறார்கள்.