தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் கோட்டா சீனிவாச ராவ். பிரபல தெலுங்கு நடிகரான இவர் தமிழில் விஜயின் திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை என்ற கேரக்டரில் நடித்த புகழ் பெற்றவர். அதைத் தொடர்ந்து சாமி திரைப்படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பின்னர் தாண்டவம், சகுதி, கொக்கி, கோ, சாமி, குத்து உள்ளிட்ட 30 திரைப்படங்களில் தமிழில் நடித்திருக்கின்றார். பாடகராக தன்னை நிரூபித்த இவர் தெலுங்கில் 700 க்கும் ஏற்பட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். வில்லனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்கள் காமெடி கதாபாத்திரங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
1975 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். சினிமாவில் 80 ஆண்டுகளை கடந்த நிலையிலும் நடித்து வந்த இவர் தனது மகன் பைக் விபத்தில் உயிரிழந்த பிறகு மிகவும் உடைந்து போனார். அந்த பைக் விபத்தில் மகனுடன் சேர்ந்து மனைவியும் இறந்து போக மிகவும் உடைந்து போய்விட்டார் கோட்டாசீனிவாச ராவ்.
நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் உயிரிழந்து விட்டதாக பல தகவல்கள் வெளியானது. இது குறித்து அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு இதனை வதந்தி என்று கூறியிருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் லோக்சபா எலெக்ஷன் நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று தெலுங்கானாவில் ஓட்டு பதிவு நடைபெற்றது. அதில் ஓட்டு போடுவதற்காக மிகவும் சிரமப்பட்டு கோட்டா சீனிவாசன் நடந்து வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.