தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்திய சினிமாவின் குயின் என்ற செல்லப் பேருடன் அழைக்கப்பட்டு வரும் திரிஷா தற்போது நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்திருக்கின்றார். 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

இவர் பிறர் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித். விக்ரம் என்ற முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்து மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. தற்போது கமலின் தக் லைப் திரைப்படத்திலும், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பிசியான நடிகையாக வளம் வருகிறார் நடிகை திரிஷா.

40 வயதை கடந்த நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் நேற்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்த திரிஷா சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் சின்ன வயசு த்ரிஷாவா இது என்று கூறி வருகிறார்கள்.
