#image_title
1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. முதல் படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்த சௌந்தர்யாவுக்கு தமிழில் அறிமுகமான ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அருணாச்சலம், படையப்பா என ரஜினியுடன் இரண்டு படங்களில் சௌந்தர்யா நடித்துள்ளார். அதேபோன்று காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட படங்களினாலும் சௌந்தர்யா பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஆனால் சௌந்தர்யா இளம் வயதிலேயே உயிரிழந்தார். திருமணம் முடிந்த சௌந்தர்யா கர்ப்பிணியாக இருந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தனது சகோதரனுடன் விமான பயணம் மேற்கொண்ட சௌந்தர்யா விபத்தில் உயிரிழந்தார்.
குறைந்த எண்ணிக்கையில் சௌந்தர்யா படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் ஏராளமான சொத்துக்களை சேர்த்து இருந்தார். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நிலம், வீடு, நகை, பணம் என சுமார் 100 கோடி மதிப்புள்ள சொத்து அவருக்கு இருந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் அவர் விமான விபத்தில் உயிரிழந்ததால் அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவரது தாய் மற்றும் கணவன் இதனை முற்றிலுமாக மறுத்தனர். பின்னர் பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு சௌந்தர்யாவின் சொத்துக்களை தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…