இந்த வயசுல உனக்கு கள்ள புருஷன் கேட்குதா?… கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றிய தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்… சென்னையை அலறவிட்ட சம்பவம்…!

Spread the love

சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த மலர்விழி என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து மலர்விழி ஹவுஸ்கீப்பிங் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் தினமும் வேலைக்குச் சென்று விட்டு மாலை ஆட்டோவில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அவ்வாறு ஆட்டோவில் வரும் போது மலர் விழிக்கு ஆட்டோ ஓட்டுனர் ஆன அந்தோணி (30) என்பவருடன் திருமணத்திற்கு மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றாக வெளியில் சுற்றி திரிந்தனர்.

இதனை அறிந்த மலர்விழியின் குடும்பத்தினர் அவரை கண்டித்த நிலையில் தனது உறவை கைவிடாமல் தொடர்ந்து அந்தோணியுடன் மலர்விழி பழகி வந்துள்ளார். பிறகு இந்தச் செய்தி அறிந்த மலர்விழியின் மகன்கள் அந்தோணியின் மீது கோபத்திலிருந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்தோணி இரவு குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுனர் நிலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்தோணியை சோதனை செய்து அவருடைய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பிறகு காலையில் போதை தெளிந்ததும் காவல் நிலையத்தில் வந்து ஆட்டோவை வாங்கிக் கொள்ளுமாறு அனுப்பி வைத்தனர். பேருந்து மூலம் அந்தோணி மெரினா கடற்கரைக்குச் சென்ற நிலையில் தனது கள்ளக்காதலி மலர்விழிக்கு போன் செய்து நேரில் அழைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தோணிக்கு உணவு எடுத்துக்கொண்டு வந்த மலர்விழி அவருடன் படகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த அவருடைய மூத்த மகனான 19 வயதுடைய ஆகாஷ் அவருடைய நண்பரான 25 வயது உடைய நபருடன் கடற்கரைக்கு வந்து அங்கிருந்து அவருடைய தாயை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிறகு அந்தோணியுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் அவருடைய நண்பர் அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.

காலையில் இதனை பார்த்த மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் முறையை குற்றவாளிகள் ஆன இருவரை கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

56 minutes ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

1 மணத்தியாலம் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

1 மணத்தியாலம் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago