தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக ஒரு வாரம் பெங்களூரு செல்வதாக கணவன் தனது மனைவியிடம் பொய் கூறியுள்ளார். அந்தப் பொய்யை நம்பியது போல நடித்த மனைவி, புன்னகையுடன் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆனால், கணவன் சென்ற இரண்டு நாட்களில் மனைவியின் செல்போனுக்கு போக்குவரத்து போலீசாரிடமிருந்து “அதிவேகமாக வாகனம் ஓட்டியது” (Overspeeding) தொடர்பான ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அந்த கார் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அதற்கான அபராதத் தகவல் (Challan) அவருக்கு அனுப்பப்பட்டது. அதில் இருந்த லிங்க்கை (Link) திறந்து பார்த்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போக்குவரத்து கேமராவில் பதிவான அந்தப் புகைப்படத்தில், அவரது கணவன் மற்றொரு பெண்ணுடன் (காதலி) காரில் அமர்ந்து மகிழ்ச்சியாகச் சென்றது மிகத் தெளிவாகத் தெரிந்தது. பெங்களூரு செல்வதாகக் கூறிவிட்டு, காதலியுடன் சுற்றித் திரிந்த கணவனின் உண்மை முகம் அந்த ஒற்றைப் புகைப்படத்தின் மூலம் அம்பலமானது.
இந்தச் சூழலில் அழுது புலம்பாமல் மிகத் துணிச்சலாகச் செயல்பட்ட அந்த மனைவி, அரசு அனுப்பிய அந்த அதிகாரப்பூர்வப் புகைப்படத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டார். அதை ஒரு வலுவான ஆதாரமாகக் கொண்டு நேராக நீதிமன்றத்தை அணுகினார். அந்த ‘சாலிட் எவிடென்ஸ்’ மூலம் விவாகரத்து பெற்றதோடு மட்டுமல்லாமல், பல கோடி ரூபாய் ஜீவனாம்சத்தையும் (Alimony) வென்றெடுத்தார். விதிமீறல்களைக் கண்காணிக்கும் போக்குவரத்து கேமராக்கள், அந்த நபரின் துரோகத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவருக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…
90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…