“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

Spread the love

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அமன்குமாரின் மனைவியும் ஒரு நீதிபதி ஆவார். தற்கொலைக்கு முன்னதாக தனது தந்தையைத் தொடர்புகொண்ட அமன்குமார், தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், வாழ்வதற்கே கஷ்டமாக இருப்பதாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது தந்தை ராஜஸ்தானில் இருந்து உடனடியாக டெல்லிக்கு விரைந்து வந்த நிலையிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

நீதிபதி அமன்குமாரின் தந்தை அளித்த புகாரின்படி, கணவன் – மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. அவரது மனைவி நிதி மாலிக், வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமன்குமாரை மனரீதியாகக் கடுமையாகச் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அமன்குமார் அழுதுகொண்டே பாத்ரூம் சென்ற நிலையில், நீண்ட நேரம் வெளியே வராததால் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

38 minutes ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

1 மணத்தியாலம் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

1 மணத்தியாலம் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

3 மணத்தியாலங்கள் ago