சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது குறித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2021-ல் வெறும் 13,000 ரூபாய்க்கு வேலையைத் தொடங்கிய அவர், தனது விடாமுயற்சியால் படிப்படியாக வளர்ந்து தற்போது 2026-ல் 32,000 ரூபாய் ஊதியம் பெறுவதாகப் பதிவிட்டுள்ளார். எவ்வித பந்தாவும் இன்றி தனது சீருடையுடன் அவர் பகிர்ந்த இந்த எதார்த்தமான வீடியோ, இரண்டு நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமானோரைக் கவர்ந்து வைரலாகியுள்ளது.
இவரது ஊதிய உயர்வைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை விட இது சிறந்த வளர்ச்சி எனப் பாராட்டி வருகின்றனர். சரியான நேரத்தில் வேலையை மாற்றியதும், கடின உழைப்புமே இவருக்கு இத்தனை பெரிய உயர்வைக் கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பட்டதாரிகளே வியந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ள இவரது முன்னேற்றம், எளிய வேலையில் இருப்பவர்களுக்கும் தன்னம்பிக்கையை ஊட்டும் ஒரு வெற்றிக் கதையாக மாறியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…