Connect with us

CINEMA

50 சதவீத வசூலை கூட பெறாத அயலான்.. கடுப்பில் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு..

ஆறு ஆண்டுகள் என் நீண்ட இடைவெளிக்கு பின், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது அயலான் படம். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், இதுவும் சயன்டி பிக்சன் படம்தான் என்றாலும், இதில் ஒரு வித்யாசமான புதுமையாக ஏலியன் உருவத்தை ஒரு கேரக்டராக கொண்டு வந்திருக்கிறார் ரவிக்குமார். ஆனாலும் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்பதே இப்போதைய நிலவரம். காரணம், மூன்று நாட்களில் 50 கோடி வசூல் என கிளப்பி விட்டாலும், உண்மையான வசூல் 30 கோடி ரூபாய். எப்படியாவது படத்தை இன்னும் ஒரு லெவலுக்கு கொண்டுவர திட்டமிட்ட சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு இதுதான்.

   

அதாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்திப்பது. அதாவது அயலான் படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு திடீரென சென்று, அங்கு ரசிகர்களை சந்திப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதன்மூலமாக ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு ஒரு இமேஜ் கிரியேட் ஆகும்.

அதன்மூலம் கிடைக்கும் விளம்பரத்தால் தியேட்டர்களை நாடிவரும் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரிக்கும் என்ற எண்ணம்தான். முதலில் கோவையில் நேற்று துவங்கிய இந்த தியேட்டர் விசிட், கோவையிலும், அதைத்தொடர்ந்து திருப்பூரிலும் நடந்துள்ளது.

இனி அடுத்தபடியாக முக்கிய ஊர்கள் மற்றும் நகரங்களுக்கு நேரில் செல்லவும் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன், டைரக்டர் ரவிக்குமார் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். ஏலியன் பொம்மையை எடுத்துச் செல்லாவிட்டாலும், தியேட்டர்களில் அந்த பொம்மை இருக்கும் என்பதால், அதையே காட்டி விளம்பரம் செய்து விடுவார்கள்.

இந்த திடீர் முடிவை சிவகார்த்திகேயன் அண்ட் கோ எடுக்க முக்கிய காரணமே, படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீதம் தான் வசூலாகும், மீதி 50 சதவீதம் நஷ்டம்தான் என்ற நிலை இப்போதே தெரிந்து விட்டதாம். தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிக்கிற நிலையில், இந்த நிலைமை மாற்றதான், சிவகார்த்திகேயன் கடைசியில் இந்த தியேட்டர் விசிட் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். இது பயனளிக்குமா, புஸ்வாணமாக போகுமா என்பது போக போக படத்துக்கு கிடைக்கும் வசூலில் தெரிய வந்துவிடும்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top