என்னதான் அரண்மனை 3 திரைப்படம் ஃபிளாப்பானாலும் அடுத்த சீரியஸை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சவால் விட்ட சுந்தர் சி சொன்னதை செய்து காட்டி இருக்கின்றார். முதல் நாள் முதலே அரண்மனை 4 திரைப்படம் பட்டையை கிளப்பி வருகின்றது. சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படம் முதல் நாள் முதலில் பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்று வருவதால் மக்கள் திரையரங்குக்கு படையெடுத்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் தமிழ் படங்கள் இந்த வருடம் முதலில் சொதப்பி வரும் நிலையில் முதல் வெற்றியாக அரண்மனை 4 திரைப்படம் அமைந்திருக்கின்றது.
அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 3 கோடி முதல் 4 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து ஐந்து நாட்களில் 30 கோடி வரை வசூல் செய்திருந்தது. சுந்தர் சி மற்றும் குஷ்பூ தயாரிப்பு நிறுவனம்தான் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து சுந்தர் சி குடும்பமே மிகவும் சந்தோஷமடைந்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ணா காரணம் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவர்களை விட இப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி என்று கூறி வருகிறார்கள். பொதுவாக பேய் படங்கள் நன்றாக போகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பேக்ரவுண்ட் மியூசிக் தான். இந்த திரைப்படத்தை அந்த அளவுக்கு பரபரப்பாக கொண்டு சென்றது இப்படத்தின் மியூசிக் தான் என பலரும் கூறி வருகிறார்கள்.