Connect with us

CINEMA

தலைவருடன் நடக்காமல் போனது தளபதியுடன் நடந்துருச்சு.. ‘GOAT’ படத்தில் முன்னணி ஹீரோவை களமிறக்கி ஷாக் கொடுத்த வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

   

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிகின்றார். அதை தொடர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், நிதின் சத்யா, பிரேம்ஜி, சினேகா, லைலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஓரிரு வாரங்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். அதில் ஒன்று இளமை கதாபாத்திரம் என்பதால் டி ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய் இளமையாக காட்ட அமெரிக்காவில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ்-ஆக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதுதான் நடிகர் விஜயின் கடைசி படம் என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்க இருக்கின்றார். இந்நிலையில் கோட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அது முடியாமல் போனது. தற்போது விஜய் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top