Categories: சினிமா

தன் பிறந்தநாளில் பராசக்தி பட குழுவினருக்கு விருந்து வைத்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவை கொண்டாட கூடிய நடிகராக வளர்ந்த நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான இந்த திரைப்படம் மறைந்த மேயர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே இந்த திரைப்படம் எழுவது கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஒட்டுமொத்த பட குழுவினரையும் ரசிகர்கள் பாராட்டினர். அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படங்களில் பிஸியாக கமிட் ஆகி நடித்து வருகின்றார். அதன்படி ஏ ஆர் முருகதாஸுடன் மதராசி, சிபி சக்கரவர்த்தியுடன் தன்னுடைய 24 ஆவது படம் மற்றும் சுதா கொங்கராவுடன் தன்னுடைய 25ஆவது படமான பராசக்தி ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். பராசக்தி திரைப்படம் இந்தி எதிர்ப்பு போராட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வரும் நிலையில் பட தீயில் ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது. இப்படியான நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தன்னுடைய சம்பளத்திற்கு பதிலாக சிவகார்த்திகேயன் வேறு ஒரு முயற்சியை கையாண்டுள்ளார். அதாவது அமரன் படத்தின் வெற்றியாள் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை 70 கோடிகள் வரை உயர்த்தியுள்ளார். மதராசி திரைப்படம் ரிலீஸ் ஆனால் அவருடைய சம்பளம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இப்படியான நிலையில் தன்னுடைய 25ஆவது படமான பராசக்தி படத்தில் சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் கணிசமான சதவீதம் பங்கு கேட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த முடிவுக்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு எப்படியும் சுமார் 150 கோடிகள் வரை பங்காக கிடைக்கும் என சிவகார்த்திகேயன் எதிர்பார்க்கின்றாராம். இப்படியான நிலையில் சிவ கார்த்திகேயன் சமீபத்தில் தன்னுடைய 40 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பராசக்தி பட குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் தன் கையாலே பரிமாறி மகிழ்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

49 seconds ago

“6 கோடி மோசடி”, “வசூல் வேட்டை”…. தவெக பொதுச்செயலாளரை அதிரவைத்த இயக்குனர் பிரபு ராஜா… விஜய் கட்சிக்கு கடைசி நேரத்தில் விழுந்த செக்…!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

5 minutes ago

மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?… ஜியோவின் அடுத்த டார்கெட் இன்சூரன்ஸ் தானா?… முகேஷ் அம்பானியின் மெகா கனவு இதோ…!

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும்…

8 minutes ago

செல்வப்பெருந்தகை கையில் சிக்கிய ஆதாரம்… ஏப்ரல் 24 காலை 11 மணிக்கு உடையப்போகும் உண்மை… திடீர் பரபரப்பு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில்…

12 minutes ago

ஷாக்..! மேடையில் இளம் வீரரை கட்டிப்பிடித்த காவ்யா மாறன்..? தர்மசங்கடத்தில் நெளிந்த சக வீரர்… வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…

13 minutes ago

கடைசி நிமிட டுவிஸ்ட்…. “ராகுல் காந்தியின் 2 நிமிட வீடியோ”… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்…

15 minutes ago