Categories: சினிமா

இரண்டாவது படத்திலேயே கார் வாங்கிய வடிவேலு.. கோபத்தில் கவுண்டமணியும் செந்திலும் என்ன செய்தார்கள் தெரியுமா?.. பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் காமெடி நடிகர்கள் என்றால் கவுண்டமணி மற்றும் செந்தில் தான் அனைவருடைய நினைவுக்கும். 90 காலகட்டத்தில் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த காமெடிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவை. அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற வாழைப்பழம் காமெடியை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. இப்படி இருவரும் சினிமாவில் காமெடியில் உச்சத்தில் இருந்த போது இவர்களுடன் இணைந்தவர்தான் நடிகர் வடிவேலு. ஆனால் ஆரம்பத்தில் வடிவேலுவை கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு பிடிக்காமல் பல சண்டைகள் நடந்துள்ளது. அது குறித்த சில தகவல்களை வடிவேலுவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பிரபல இயக்குனர் வி. சேகர் பகிர்ந்துள்ளார்.

அதில், வடிவேலு சினிமாவுக்குள் நுழைந்தபோது இவனெல்லாம் ஒரு ஆளா இவனை எதுக்கு இங்க கொண்டு வந்தீங்க என்று கவுண்டமணி மற்றும் செந்தில் சண்டை போட்டு உள்ளனர். வடிவேலு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே கார் வாங்கி விட்டான். அவன் கார் வாங்கியது தான் சிக்கலுக்கு ஆரம்ப புள்ளி. நான் பெத்த மகனே படபிடிப்பில் கவுண்டமணி மற்றும் செந்தில் அவரவர் கார்களை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அவர்களை விட விலை உயர்ந்த காரை வாங்கி இருந்த வடிவேலு தான் கார் வாங்கி இருப்பதை அவர்களுக்கு காட்டும் விதமாக அவர்களின் கார்களை இடிப்பது போல் வந்து அதன் அருகில் தனது புதிய காரை நிறுத்தினார்.

இதனால் கடுப்பான செந்தில் கவுண்டமணியிடம் சென்று சார் வடிவேலு நம்முடைய காரை எடுப்பது போல காரைக் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கிறான். கொஞ்சம் விட்டால் இடித்து விடுவான் போலிருக்கு என்று கூறினார். அதனால் கவுண்டமணி அவன் சரியான விவகாரமான ஆளா இருக்கான் விட்டா அவன் நம்ம மீது காரை ஏற்றி விடுவான். அதனால் டைரக்டர் இடம் கொண்டு போவோம் என்று என்னிடம் வந்து சொன்னார்கள். நான் வடிவேலுவை அழைத்து விஷயத்தை சொன்னேன். அதற்கு அவன் வேறு எங்கு காரை நிப்பாட்ட முடியும், இடிப்பது போல வந்தேன் ஆனால் இடித்தேனா என வாதம் செய்தான். செந்தில் மற்றும் கவுண்டமணிக்கு எதிராகவே புதிய காரில் என்னை ஏற்றுக் கொண்டு ஒரு ரவுண்டு வந்து ஸ்டைலாக இறக்குவான்.

அதன் மூலம் அவர்களை கடுப்பேற்ற வேண்டும் என்பதுதான் வடிவேலுவின் எண்ணம். காலம் மாறிப்போச்சு படத்தில் வடிவேலுவின் இம்சை தாங்க முடியாமல் கவுண்டமணி அவனை படத்திலிருந்து தூக்குங்கள் என்று கூறினார். அப்போது செந்தில் கோவை சரளாவும் படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமாக இருந்தனர். இந்த நிலையில் தான் வடிவேலுக்கு கோவை சரளா ஜோடியானதை செந்திலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவரும் என்னிடம் வந்து வடிவேலுவை தூக்கி விடுங்கள் என்று கூறினார்.

அதற்கு நான் அவனுக்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்து விட்டேன், அதனால் அவனைத் தூக்க முடியாது அடுத்த படத்தில் தூக்கி விடலாம் என்று கூறினேன். ஆனால் கவுண்டமணி அதற்கு ஒத்துக்கொள்ளாமல் படத்தில் இருந்து விலகி விட்டார். பிறகுதான் காலம் மாறி போச்சு படத்தில் வடிவேலுவுடன் நடிக்க ஆர் சுந்தர்ராஜனை கொண்டு வந்தேன். நான் எதிர்பார்த்ததை விட படம் நல்ல வெற்றி பெற்றது. அதன் பிறகு காலப்போக்கில் வடிவேலுவுடன் நடிக்க ஆள் இல்லாமல் போய்விட்டது. இப்படியான நிலையில் தான் வடிவேலுக்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காக ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன்.

அந்த சமயத்தில் விவேக் என்னிடம் வந்து உங்களுடைய படத்தின் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டார். உங்களுடைய படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியதும் வடிவேலுவையும் விவேக்கையும் இணைத்து பல படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அப்படி எடுத்த படங்கள் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. கோவை சரளா மற்றும் வடிவேலு காம்போ மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென்று என்னிடம் வந்த விவேக் கோவை சரளாவை என்னுடன் ஜோடி சேருங்கள் என்று கூறினார். அதன்படி சில படங்களில் விவேக் உடன் கோவை சரளாவை ஜோடியாக நடிக்க வைத்தேன் என இயக்குனர் வி.சேகர் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

3 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

11 minutes ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

1 மணத்தியாலம் ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

1 மணத்தியாலம் ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

1 மணத்தியாலம் ago