தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையையும் பார்த்துக் கொண்டு சினிமாவையும் பார்த்துக் கொண்டு பிஸியாக இருந்தனர். இப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் நான்கு ஆண்டுகளில் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
அதன் பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்த நிலையில் விவாகரத்து பெற்று 3 ஆண்டுகள் கழித்து நாக சைதன்யா இரண்டாவதாக பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்படியான நிலையில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து நாக சைதன்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். அதனைப் போல சோபிதாவும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் சமீபத்தில் அவருடைய தோற்றங்களில் அவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருமணத்திற்குப் பிறகு சோபிதா சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
அதாவது திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக திரையில் தோன்றிய அவர் இனி அப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக நெருக்கமான காதல் காட்சிகளில் அவர் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் சேலை அணிந்து வந்திருந்தார். இதன் மூலம் அவர் கவர்ச்சியில் இருந்து இடைவெளி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…
திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…
திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…