செல்வப்பெருந்தகை கையில் சிக்கிய ஆதாரம்… ஏப்ரல் 24 காலை 11 மணிக்கு உடையப்போகும் உண்மை… திடீர் பரபரப்பு…!

Spread the love

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 20-ஆம் தேதி தனது வீட்டில் இந்தி பேசும் நபர்கள் புகுந்து சோதனை நடத்தியதாகவும், இதன் காரணமாகவே ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்தில் தம்மால் பங்கேற்க முடியவில்லை என்றும் செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் தன்னை முடக்க நினைப்பதாக அவர் சாடினார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை (IT) அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளது. செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்திலோ அல்லது அவருக்குத் தொடர்புடைய இடங்களிலோ கடந்த சில நாட்களில் எந்தவிதமான சோதனையோ, ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று அந்தத் துறை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. வருமான வரித்துறையின் இந்த மறுப்பு, காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்ட புகார்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.

பாஜக தரப்பிலிருந்து இதற்கு கடும் எதிர்வினைகள் வந்துள்ளன. ராகுல் காந்தியின் பேச்சைச் சரியாக மொழிபெயர்க்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே செல்வப்பெருந்தகை பிரசாரத்திற்கு வர வேண்டாம் என ராகுல் உத்தரவிட்டதாகவும், அந்த அவமானத்தை மறைக்கவே ‘ஐடி ரெய்டு’ என்று ஒரு நாடகத்தை செல்வப்பெருந்தகை அரங்கேற்றுகிறார் என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். இதனால் இந்த விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் இறுதி கட்டமாக, தம்மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாராகிவிட்டார் செல்வப்பெருந்தகை. தனது இல்லத்தில் சோதனை நடந்தது உண்மைதான் என்றும், அதற்கான முழு ஆதாரங்களையும் ஏப்ரல் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு பொதுவெளியில் வெளியிடப் போவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார். வருமான வரித்துறை மறுப்பு தெரிவிக்கும் நிலையில், செல்வப்பெருந்தகை வெளியிடப்போகும் அந்த “ஆதாரங்கள்” என்னவாக இருக்கும் என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

48 minutes ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

51 minutes ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

54 minutes ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

1 மணத்தியாலம் ago

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

1 மணத்தியாலம் ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

1 மணத்தியாலம் ago