Connect with us

CINEMA

75 கோடி கடன்.. அயலான் படத்துக்காக சிவகார்த்திகேயன் செய்த தில்லாலங்கடி வேலை.. இவ்ளோ நடந்துருக்கா..?

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆக இருந்த கடைசி நேரத்தில், பிரச்னை ஏற்பட்டதால் சிவகார்த்திகேயன் ரூ. 27 கோடி பணம் கொடுத்ததால் இந்த படம் ரிலீஸ் ஆனது என்ற தகவல் பரவியது. இது உண்மைதான் என்றாலும், அது சிவகார்த்திகேயன் செய்த தியாகமாக, அவர் செய்த பெரிய உதவியாக பலராலும் பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார்.

   

இதுகுறித்து பிஸ்மி கூறியதாவது, சிவகார்த்திகேயனின் பினாமியாக செயல்பட்டவர் ஆர் டி ராஜா. இவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் படங்கள் துவக்கத்தில் வெளிவந்தன. வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனை பெரிய நடிகராக உருவாக்கவும், பப்ளிசிட்டிக்காக பில்டப் செய்யவும் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்ற பிரபல நடிகைகளை ஜோடியாக நடிக்க வைத்து அந்த படங்கள் எடுக்கப்பட்டது.

உண்மையில் அந்த படங்களின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்றாலும், பினாமியாக செயல்பட்டவர்தான் ஆர் டிராஜா. இப்படி படங்கள் தயாரித்த வகையில், ரூ. 75 கோடி வரை கடன்கள் ஏற்பட்டது. இந்த கடன்களை தனது பினாமி தயாரிப்பாளர் ஆர் டி ராஜா தலையில் கட்ட சிவகார்த்திகேயன் திட்டமிட்டார். ஆனால், இதையறித்த ஆர் டி ராஜா, உங்கள் படங்களுக்காக தான் இந்த கடன்கள் வாங்கப்பட்டது. இதில் எனக்கு சம்பந்தமில்லை என ஒதுங்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த கடன்களை வேண்டாவெறுப்பாக சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார்.

இந்த 75 கோடி ரூபாய் கடனை தனது சொந்த பணத்தில் தரக்கூடாது என சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருந்த இந்த சூழலில், தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ், அவரிடம் பலியாடாக சிக்கினார். அப்போது அவர் அந்த கடன்களை 22 கோடி, 23 கோடி ரூபாயக தருவதாக ஏற்றுக்கொண்டார். அதற்கு காரணம், தொடர்ந்து அவரது தயாரிப்பில் படங்களில் நடிக்க கால்ஷீட் தர சிவகார்த்திகேயன் அக்ரிமென்ட் போட்டார்.

ஆனால் ஹீரோ உள்ளிட்ட படங்கள் ஓடாததால், அடுத்தடுத்த கால்ஷீட் சிவகார்த்திகேயன் தரவில்லை. இந்த சூழலில்தான், அந்த பணத்தை தர வேண்டும் என கடன்தாரர்கள் தரப்பில் அழுத்தம் கொடுத்த போது, கேஜேஆர் ராஜேஷ், உண்மை நிலவரத்தை கூறிவிட்டார். இதையடுத்து, கடன் பணத்தை தந்தால்தான் அயலான் படத்தை வெளியிட விடுவோம் என கடன்காரர்கள் தரப்பில் பிரச்னை செய்ததால், அந்த 27 கோடி ரூபாய் தொகையை, தனது படங்களுக்காக முன்னால் வாங்கிய கடனை சிவகார்த்திகேயன் தந்துள்ளார். மற்றபடி அவர் அந்த பணத்தை சும்மா தரவில்லை என்று பிஸ்மி தெளிவுபடுத்தியுள்ளார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top