Connect with us

CINEMA

கமல் – சிம்பு கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்.. இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா..? ரகசியமாக நடக்கும் VFX பணிகள்..

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார் என்ற தகவல் ஆண்டுக்கணக்கில் நீடித்தாலும், இன்னும் படப்பிடிப்பு துவங்கிய அறிகுறிகள் இல்லை. இதற்கிடையே படம் குறித்த எந்த தகவலும் இல்லாததால், அந்த படத்தை ட்ராப் செய்துவிட்டதாகவும் ஒரு தகவல் சமீபமாக வேகமாக பரவியது. வழக்கம்போல, கமல் தயாரிப்பு நிறுவனத்திலும் தன் வேலையை சிம்பு காட்டிவிட்டார். இவர்தான் படத்தில் நடிப்பதாக ஒத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே போகாத ஆளாச்சே என்ற ஒரு விமர்சனமும் திடீரென எழுந்தது.

   

ஆனால் உண்மையான நிலவரப்படி ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம், டிராப் எதுவும் செய்யப்படவில்லை. அந்த படம் கண்டிப்பாக எடுக்கப்படுகிறது. அந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள், விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுவதால், அதற்கான விஎப்எக்ஸ் ஊழியர்களுக்கு, ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திலேயே இடம் ஒதுக்கி, அங்கு வந்து பல நாட்களாக ஊழியர்கள் விஎப்எக்ஸ் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் காட்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனமே செய்த நூதன ஏற்பாடு இது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், விஎப்எக்ஸ் பணிக்காக, வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தால், அவர்கள் படம் குறித்த காட்சிகளை லீக் செய்து, கதையை வெளியே சொல்லி விடுவார்கள். அதனால் இப்படி நமது கண்ட்ரோலில், மேற்பார்வையில் விஎப்எக்ஸ் பணிகள் நடந்தால் அதற்கான வாய்ப்பு இருக்காது என்பதுதான் மிக முக்கிய காரணம். மேலும், ஹாலிவுட்டில் 300 என்றும், தமிழில் 300 பருத்திவீரர்கள் என்ற பெயரிலும் வெளியான அந்த படத்தின் தழுவல்தான், சிம்பு நடிக்கும் படம் என்றும் தெரிய வந்துள்ளது. அதனால், ரகசியமாக விஎப்எக்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்.

 

#image_title

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top