சிறுநீரில் வந்த ரத்தம்..! எக்ஸ்ரே பார்த்தபோது பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த அதிர்ச்சி… மருத்துவர்கள் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்..!!

Spread the love

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த உஷா ஜோசப் (51) என்ற பெண், கடந்த 2021-ஆம் ஆண்டு மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று ஆண்டுகளாகத் தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட இந்த வலியைக் குறைக்கப் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. அண்மையில் அவருக்குச் சிறுநீரில் ரத்தம் வெளியேறியதைத் தொடர்ந்து, சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, அவரது வயிற்றில் 10 சென்டிமீட்டர் நீளமுள்ள அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்த இந்த விபரீதம் குறித்து கேரள சுகாதாரத்துறை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அறுவை சிகிச்சையின் போதே இந்தக் கத்தரிக்கோல் வயிற்றில் விடப்பட்டதா என்பது குறித்தும், இதில் தொடர்புடைய மருத்துவக் குழுவினர் குறித்தும் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் தற்போது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டாலும், நீண்ட காலமாக அவர் அனுபவித்த உடல் மற்றும் மன வேதனைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

7 minutes ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

12 minutes ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

15 minutes ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

21 minutes ago

“அம்மாடியோ… 74 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பகீர் உண்மை… 52 உயிர்களைக் குடித்த… மாய விமானத்தின் பாகங்கள் மீட்பு…! 2,000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் அதிர்ச்சி காட்சி…!!”

1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…

25 minutes ago

“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…

25 minutes ago