#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டிகளில் ஒருவராக பார்க்கப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் நடிகனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்பொழுது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி ‘பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ‘ என்ற அவ பெயருடன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கு முக்கிய காரணம் மாயாவும் அவருடன் இருந்தவர்களும் தான் இவர்கள் பிளான் போட்டு பிரதிப் ஆண்டனியை வெளியேற்றினர். கமலஹாசனும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு , தீர விசாரிக்காமல் ரெட் கேட் கொடுத்து அவரை வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு எதிராக சோசியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்தது. டைட்டில் வென்றிருந்தால் கூட பிரதீப் ஆண்டனி இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார்.
அந்த அளவிற்கு தற்பொழுது அவருக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் பிரதீப் எப்போதும் தனது டுவிட்டர் பக்கத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியவர். இவருக்கு வேற எந்த சோசியல் மீடியாவிலும் அக்கவுண்ட் கிடையாது. இந்நிலையில் பிரதீப் ஆண்டனியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு போலியான அக்கவுண்டில் ஒருவர் நடிகை சமந்தாவை குறிப்பிட்டு ‘தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்த இந்த நல்ல விஷயத்திற்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த கமெண்ட்டிற்கு நடிகை சமந்தா ‘பல்லாவரம் பொண்ணு. எப்பவும் பல்லாவரம் பொண்ணு தான்’ என்று கையெடுத்து கும்பிட்டு ரிப்ளை செய்துள்ளார். தற்பொழுது இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இது உண்மையில் நடிகர் பிரதீப் ஆண்டனியின் பதிவு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது .நடிகை சமந்தா தற்பொழுது எம் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சின்ன திரையில் கால் பதித்துள்ளார். இந்த ரேப் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…
விலங்குகளின் வேட்டைத் திறன் எப்போதுமே மனிதர்களை வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. காடுகளிலும் நீர்நிலைகளிலும் தினந்தோறும் அரங்கேறும் இந்த வாழ்வாதாரப் போராட்டங்கள்,…
சென்னையில் லஞ்ச விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் அதிரடியாகக் கைது…