#image_title
இயக்குனர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பருத்தி வீரன் பிரச்சனை தற்பொழுது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் அமீரை தரக்குறைவாக ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்ததே இந்த சர்ச்சைக்கு தற்பொழுது முக்கிய காரணம். இதனால் பாரதிராஜா , சமுத்திரக்கனி, சசிகுமார், கரு. பழனியப்பன், பொன்வண்ணன் என பலரும் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்பொழுது இயக்குனர் பிரபாகரன் தற்போது இயக்குனர் அமீர் ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘அடித்த புயலில் ஒரு உண்மை செத்து விடக்கூடாது என்பதற்காக இந்த கடிதம்’ என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ‘இதுவரை 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது நீங்கள் தூய விஷ விதை விருட்சமாய் மாறி அண்ணன் அவர்களின் திரைப்பயணத்தை திசை மாற்றி போட்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை இன்னொரு பாரதிராஜாவாக ஏற்றுக் கொள்ள. அவர் மீது நீங்கள் சேற்றி வாரி இறைத்தது, அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மையை பேச வைத்துள்ளது. அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்கு உங்களுக்கு பெரும் நன்றி. இந்த பிரச்சினையை நீங்கள் முடித்துக் கொள்வதுதான் நல்லது’ என்றும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு …
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…