சமீபகாலமாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்களுக்கு பெரும்பாலும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் 2 படத்துக்கு பின் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன்தான் அந்த படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் சுந்தர் சி என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் பின்வாங்கி விட்டார். தவிர்க்க முடியாத சில காரணங்களில் இந்த படத்தை இயக்க முடியவில்லை என்றும் சுந்தர் சி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவது ஏறக்குறைய முடிவாகி விட்டது. நடிகர் சிம்பு நடிக்க இருந்த படத்தின் கதையை ரஜினிக்கு ஏற்ப மாற்றி இந்த படத்தை அவர் டைரக்ட் செய்கிறார். கதை கேட்ட ரஜினியும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவில்லை. மாறாக, தனது முதல் படமான பார்க்கிங் படத்துக்கு இசையமைத்த சாம் சிஎஸ் தான் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் விருப்பமாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன், இசையமைப்பளாராக சாய் அபயங்கரை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…