விவாகரத்துலாம் பொய்.. மருத்துவமனையில் பாவதாரணியை கடைசிவரை பாத்துக்கிட்டது கணவர் மட்டும் தான்.. உண்மையை உடைத்த கணவரின் சகோதரர்..

By Sumathi

Updated on:

இளையராஜாவின் மகள் பவதாரணி சமீபத்தில் கல்லீரல் புற்றுநோயால் இறந்தார். அதுகுறித்து பவதாரணியின் கணவர் சபரியின் அண்ணன் கண்ணன் நேர்காணலில் கூறியதாவது, பவதாரணிக்கு கேன்சர் இருப்பது குறித்து அவரிடம் யாரும் அதுபற்றி சொல்லவில்லை.

ஆனால் கேன்சர் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை தரும்போது அவரே ஓரளவு புரிந்துக்கொண்டு இருப்பார். தனக்கு புற்றுநோய் வந்துள்ளது என்று அவரே தெரிந்திருப்பார். கல்லீரல் புற்றுநோய் என்பதால் ஒன்றை மாற்றி ஒன்று ஏதாவது ஒரு பிரச்னையை உண்டு பண்ணி அடிக்கடி அவருக்கு சிகிச்சை தர வேண்டிய நிலை ஏற்பட்டது.

   

இரண்டாவது முறை இப்படி கேன்சர் சிகிச்சைக்கு டாக்டர்களிடம் சென்றபோது, அதிகபட்சம் இன்னும் ஒரு ஆறு மாதங்கள். இல்லை என்றால் 3 மாதங்கள் வரைதான் பவதாரணி இருப்பார். அதற்கு மேல் ஒன்றும் பண்ண முடியாது என்று டாக்டர்கள் தெளிவாக கூறிவிட்டனர். ஹீமோதெரபி போன்ற துன்புறுத்தலான சிகிச்சை முறைகளை தந்து மேலும் அவரை துன்புறுத்தக் கூடாது என பவதாரணியின் கணவர் சபரி, அப்பா இளையராஜா என இருவரும் கூறிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் ஸ்ரீலங்காவில் இருக்கும் டாக்டர் குறித்து யுவன் சங்கர் ராஜா பரிந்துரை செய்கிறார். எப்படியாவது பிழைத்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை குடும்பத்தில் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே அங்கு செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது. இறப்பதற்கு ஒரு 10 நாட்களுக்கு முன் இலங்கைக்கு சென்றோம்.

அங்கு ஒரு நான்கு நாட்கள் நன்றாக இருந்தார், பிறகு திரும்ப திரும்ப ஏதேனும் உடல் சார்ந்த பிரச்னைகள் வந்துக்கொண்டே இருந்தது. சபரிதான் அப்போது உடனிருந்து கவனித்துக்கொண்டார் என்று கூறியிருக்கிறார் அவரது அண்ணன் கண்ணன். அதனால் சபரி, பவதாரணி விவாகரத்து என்ற தகவல் பொய்யானது, வதந்தி என்பதை சபரியின் அண்ணன் கண்ணன் தெளிவுபடுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Sumathi