நடிக்க தெரியாமல் விஜயசாந்தியிடம் திட்டு வாங்கிய சரத்குமார்… அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on வைகாசி 20, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சிவகுமார் போல மார்க்கண்டேயனாக வலம் வருபவர் சரத்குமார். 70 வயதிலும் அவர் 30 வயது இளைஞர் போல தோற்றமளிக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னால் பத்திரிக்கை தொடர்பாளர், சினிமா தயாரிப்பாளர் என பல துறைகளில் பணியாற்றியுள்ளார்

கண் சிமிட்டும் நேரத்திலே என்ற படம் மூலமாக தமிழ் திரையுலைகளுக்கு அறிமுகமான சரத்குமார் அவர்கள் அதன் பின் சேரன் பாண்டியன், சூர்ய வம்சம், நாட்டாமை போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றிகளைக் கொடுத்த அவர் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்தார்.

   

2000களுக்குப் பிறகு அவரின் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் கதாநாயகனாக நடிக்காமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

   

இந்நிலையில் தான் சினிமாவில் அறிமுகமான போது நடந்த சொதப்பலான சம்பவம் ஒன்றை பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். அப்போது ஒரு நடிகர் நடிக்க வராததால் இவரையே நடிக்க சொல்லியுள்ளார் இயக்குனர்.

 

அந்த படத்தில் விஜயசாந்திதான் ஹீரோயின். சரத்குமாருக்கு முதல் காட்சியே விஜயசாந்தியை சீண்டுவதுதானாம். அப்போது தெலுங்கில் ஒரு நீளமான வசனத்தைக் கொடுத்து பேச சொல்லியுள்ளார்கள். சரத்குமாருக்கு தெலுங்கு பேச தெரியாது என்பதால் அந்த வசனத்தைப் பேச தடுமாறியுள்ளார். அதனால் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை எடுக்க சொல்லியுள்ளனர்.

அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்த விஜயசாந்தி ஒரு கட்டத்தில் கடுப்பாகி திட்ட ஆரம்பித்தாராம். இயக்குனரிடம் ‘ஏன் இப்படிபட்டவர்களை எல்லாம் நடிக்க வைக்கிறார்கள். ஏன் ஒரு தொழில்முறை நடிகர்களை நடிக்க வைக்க வேண்டியதுதானே.. எனக்கு என்ன வேறு வேலை இல்லை என்று நினைத்து என் நேரத்தை வீணடிக்கிறீர்களா?” எனக் கண்டபடி திட்டியுள்ளார். அப்புறம் எப்படியோ சமாளித்து அந்த காட்சியை எடுத்து முடித்தார்களாம். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவத்தை சரத்குமார் விஜயசாந்தியிடம் நினைவுபடுத்தி பேசினாராம்.