பிரபல பாடகியான சுசித்ரா நாளுக்கு நாள் பல நடிகர் நடிகைகளை பற்றி திடுக்கிடும் தகவல்களை கூறி சினிமா வட்டாரத்தையே திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்ததற்கான காரணத்தை கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி சுசித்ரா.
டப்பிங் கலைஞராகவும் இவர் வலம் வந்தார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சுசி லீக்ஸ் என்ற பிரச்சனை மூலமாக மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தார். பின்னர் இந்தியாவில் இருந்து லண்டன் போய் செட்டிலான இவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார். தனக்கு சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்த சுசித்ரா சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அது சுசி லீக்ஸ் என்பது ஒரு பிராங்க். தேவையே இல்லாமல் என்னை கார்த்திக் குமார் மாட்டி விட்டார். இந்த பிராங் செய்ய ட்விட்டர் கணக்கு தேவைப்பட்டதால் என்னை பலிகாடாக மாற்றிவிட்டார்கள். இதற்கு காரணம் தனுஷ்,கார்த்திக் குமார்தான். இவர்களால் தான் எனது வாழ்க்கையே போச்சு என்று பேசியிருந்தார்.
கோலிவுட் சினிமாவில் வெள்ளித் தட்டில் கொக்கன் போதை மருந்து பார்ட்டி நடைபெறும். இதில் சிம்பு, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பணக்கார வீட்டு பிள்ளைகள் கலந்து கொள்வார்கள். வெளியில் ரொம்ப நல்லவராக காட்டிக் கொள்ளும் விஜய் வீட்டிலேயே இது போன்ற பார்ட்டிகள் நடைபெறும். திரிஷாவும் இந்த கேங்கில் ஒருவர் தான். ஒரு நாள் விஜய் வீட்டில் முன்பு குடித்துவிட்டு நடனம் ஆடினார் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பல நடிகர் நடிகைகளை பற்றி பல விஷயங்களை பேசியிருந்தால் பாடகி சுசித்ரா. இந்த லிஸ்டில் விஜய் ஆண்டனியையும் விட்டு வைக்கவில்லை. விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பதை கேட்டு ஒரு மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கின்றார். விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதால் தன்னுடைய உடலை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிக் கொண்டார்.
இதை பார்த்த அவரது மகள் மீராவுக்கும் அது போன்று தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இது குறித்து மீரா கேட்கும் போது முதலில் சரி என்று கூறிய விஜய் ஆண்டனி. பின்னர் அதையே கேட்டு வந்ததால் கோபம் அடைந்திருக்கின்றார். தற்கொலை செய்வதற்கு முதல் நாள் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி மீரா பேசியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த விஜய் ஆண்டனி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து விட்டு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்ய முடியாது என கோபமாக கூறிவிட்டு சென்றுவிட்டாராம். அன்று இரவு தான் மீரா தற்கொலை செய்து கொண்டார் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
