தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா எவ்வளவுக்கெவ்வளவு எளிமையான ட்யூன்களை போட்டுள்ளாரோ அதுபோல பாடல் எழுதுவதற்கும் பாடுவதற்கும் கடினமான ட்யூன்களையும் போட்டு பாடல் ஆசிரியர்களை விழிபிதுங்க வைத்துள்ளார்.அப்படி அவர் பாக்யராஜின் படமான சின்னவீடு படத்துக்கு போட்ட ட்யூனைக் கேட்டு பாடல் ஆசிரியர்கள் பாடல் எழுதவே தயங்கியுள்ளனர்.

#image_title
அந்த ட்யூனை போட்டுக் கொடுத்த இளையராஜா, இந்த பாடலுக்கு யாரை வேண்டுமானாலும் பாடல் எழுத வைத்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டாராம். பாக்யராஜ் இந்த ட்யூனை பாடல் ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அந்த பாடல் ஆசிரியர் ட்யூனைக் கேட்டு தயங்கி, தன்னால் இந்த ட்யூனுக்கு எழுத முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் கடுப்பான பாக்யராஜ் வேறு சில பாடல் ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அவர்களாலும் அந்த வித்தியாசமான ட்யூனுக்கு வார்த்தைகளைக் கோர்த்து பாடல் எழுத முடியவில்லை. இதனால் பாக்யராஜ் தன் படங்களில் அதிகமாக பாடல் எழுதாத வைரமுத்துவிடம் ட்யூனைக் கொடுத்துள்ளார். அவர் சில நாட்களை எடுத்துக்கொண்டு அந்த ட்யூனுக்கு பாடலை எழுதினாராம்.
அப்படி உருவான பாடல்தான் இன்றளவும் ரசிகர்களால் கேட்டு மகிழப்படும் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது.. பெட்டைக் குருவி கற்றுத் தருதே” என்ற பாடல். இந்த ட்யூனுக்கு வைரமுத்து அழகான வரிகளை எழுதிய பாக்யராஜ் உள்ளிட்ட அனைவருக்குமே இன்ப அதிர்ச்சியாகதான் இருந்ததாம். அப்படிப்பட்ட ஒரு கெமிஸ்ட்ரி இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் இருந்துள்ளது.
