“என் பிள்ளையை இப்படி பண்ணிட்டாங்களே…” தாயின் கதறல்…! பள்ளி மாணவன் வாயில் பூச்சி மருந்து ஊற்றிய உறவினர்கள்… திருவள்ளூரில் கொடூரம்…!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம், அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி – ஜெயந்தி தம்பதியினரின் மகன் கௌதம், நிலத் தகராறு காரணமாகத் தனது சொந்த உறவினர்களாலேயே கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7-ஆம் தேதி விவசாய நிலத்தில் மயங்கிக் கிடந்த 12-ஆம் வகுப்பு மாணவனை மீட்ட மக்கள், அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கருதி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பெற்று வந்த மாணவன் கௌதம் சுயநினைவு திரும்பியதும், தனது தந்தை ஜோதியின் உறவினர்களான மோகன், பிச்சைமுத்து உள்ளிட்ட 6 பேர் தன்னைச் சூழ்ந்து கட்டாயப்படுத்தி வாயில் பூச்சி மருந்தை ஊற்றியதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் கௌதமின் தந்தைக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே மாணவனைத் தீர்த்துக்கட்ட உறவினர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டது விசாரணையில் உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்கை கொலை முயற்சியாக மாற்றிப் பதிவு செய்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி மாணவனின் தாயார் ஜெயந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago