லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் அப்பா ரஜினிகாந்தை சமூக வலைதளங்களில் பலரும் சங்கி என அழைப்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்றும் அப்படி சொல்லக் கூடாது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் படம் எப்படி இருக்கு, படத்தின் பாடல்களை எந்தளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வடித்து கொடுத்திருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் பேசாமல் நடிகர் ரஜினிகாந்த் விஜய்யை வைத்து ஸ்கோர் செய்ய அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சங்கி மேட்டரை கையில் எடுத்திருந்தார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு முதல் ஆளாக சென்று முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு 500 வருட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் வீட்டுக்குச் சென்று அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியது ஏகப்பட்ட சங்கி விமர்சனங்களை கிளப்பின.
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படியெல்லாம் சொல்லாதீங்க இந்த படத்தில் என் அப்பா மொய்தீன் பாயாகவே நடித்திருக்கிறார். உண்மையான சங்கின்னா அப்படி நடிக்க மாட்டாங்க என்றார். இதை பார்த்த புளூ சட்டை மாறன் வசமா சிக்கி விட்டார் ரஜினிகாந்த் என நினைத்து, ”தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும், அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும்.
உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்? தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று. சங்கி. சங்கி. சங்கி.” என பதிவிட்டு பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்.