அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண், தனது வீட்டின் அருகில் வசிக்கும் ராஜா என்பவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியாவின் கணவர் செல்வம் கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், பிரியாவிற்கும் ராஜாவிற்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தனது கணவர் வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கும் பணத்தை பிரியா ராஜாவிடம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (20.02.2026) இரவு ராஜாவின் வீட்டிற்குச் சென்ற பிரியாவிற்கும், ராஜாவுக்கும் இடையே பண விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அன்றிரவு அங்கேயே தங்கிய பிரியா, நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், ராஜா தான் பிரியாவை அடித்துக் கொன்றுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட முயன்றனர். பிரியாவின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக ராஜாவைக் கைது செய்த போலீசார், இச்சம்பவத்தைச் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…