Connect with us

CINEMA

நம்புறது கஷ்டம்தான்… 130 படங்கள் இணைந்து நடித்த ஜோடி… கின்னஸ் சாதனை படைத்த நடிகர்கள் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

சினிமாவில் ஒரு சில ஜோடிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஹாலிவுட் முதல் நம்மூர் கோலிவுட் வரை ஒரு சில ஜோடிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும். அதனால் மீண்டும் மீண்டும் அதே ஜோடியை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களில் இணைந்து நடிக்க வைப்பார்கள்.

தமிழில் அப்படி எம் ஜி ஆர் –சரோஜா தேவி, எம் ஜி ஆர்- ஜெயலலிதா, கமல்ஹாசன் –ஸ்ரீதேவி என சில ஜோடிகளை சொல்லலாம். இதில் எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து 28 படங்கள் ஒன்றாக நடித்ததே அதிகமாக தமிழ் சினிமாவில் உள்ளது.

   

ஆனால் இதை நான்கு மடங்கு படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 130 படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? மலையாள திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர்களான பிரேம் நசீரும் ஷீலாவும்தான்.

இருவரும் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் இணைந்து 130 படங்களில் நடித்துள்ளனர். இது உலகில் எந்தவொரு நடிகர் நடிகையும் படைக்காத சாதனை. கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற பகுதியில் பிறந்தவர் ஷீலா. தமிழ் நாட்டின் ஊட்டியில் வளர்ந்த 13 வயதில் எஸ்எஸ் ராஜேந்திரன் நாடக குரூப்பில் இணைந்து நடித்தார். அதன் பிறகு 17 வயதில் எம்ஜிஆர் நடித்த ’பாசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகாமானார்.

ஆனால் மலையாள உலகம் அவரை கதாநாயகியாக அடையாளம் கண்டுகொண்டது. அங்கு கதாநாயகியாக நிலைநாட்டிக்கொண்ட அவர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.  ஷீலா கடைசியாக தமிழில் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார்.

அதேபோல மலையாள திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் என சொல்லப்படுபவர் பிரேம்நசீர். இவரும் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த செம்மீன் திரைப்படம்தான் முதல் முதலாக மலையாள சினிமாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் என்ற பெருமைக்குரியது.

Continue Reading

More in CINEMA

To Top