கர்நாடக, பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்த பிரவீன். அவருக்கு மனைவி ஷில்பா (27) மற்றும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்துள்ளார். கணவன் மனைவி இருவருமே ஐடி நிறுவன ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். திருமணத்தின் போது வரதட்சணையாக ரூபாய் 50 லட்சம் ரொக்க பணமாக ஷில்பாவின் குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஐடி வேலையை ராஜினாமா செய்து விட்டு பானிபூரி உணவக கடையை தொடங்கினார் பிரவீன்.
வரதட்சணையாய் வாங்கின 50 லட்சம் போதாது என்று தொழில் தொடங்க மறுபடியும் பணம்கேட்டுத் தொல்லை செய்து வந்துள்ளார் மனைவியை. அதனால் மீண்டும் ரூபாய் 10 லட்சம் ஷில்பாவின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதுபோதாது என்று மீண்டும் பணம் கேட்டு ஷில்பாவை தொல்லை செய்துள்ளார். அதனால் சில்பா கோபித்துக் கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரவீனின் பெற்றோர்கள் ஷில்பாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்டு ஷில்பாவை பிரவீன் தொல்லை செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ஷில்பா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தெரிந்த விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீனின் தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகிய இருவரையும் கைதுச் செய்துள்ளனர். தலைமறைவான பிரவீனை தேடிப்பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…