திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

Spread the love

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. சென்னை புறநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக நள்ளிரவு மின்தடைப் பிரச்சினை பெரும் அவதியை ஏற்படுத்தி வரும் சூழலில், எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, அரசு விருந்தினர் மாளிகையிலேயே மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு மின்தடை ஏற்பட்டுள்ள விவகாரம் இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று நடைபெற்ற பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். இதன் ஒருபகுதியாக குருங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியையும் அவர் நேரில் சென்று தொடங்கி வைத்தார். தனது அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, நேற்றிரவு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக லால்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்றுள்ளார்.

அவர் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே, அங்கு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கடுமையான உக்கிருகத்தில் ஓய்வெடுக்க முடியாமல் தவித்த சௌமியா அன்புமணி, வேறு வழியின்றி நீண்ட நேரம் தனது காரிலேயே அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். அதன் பின்னரும் மின்சாரம் வராததால், காரை விட்டு இறங்கி டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியோடு தனது அறைக்குச் சென்று, அங்கிருந்து உடனடியாகத் தனது பயணத்தைத் தொடரப் புறப்பட்டுச் சென்றார்.

இந்தச் சம்பவம் பாமகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு விருந்தினர் மாளிகையில் ஜெனரேட்டர் வசதி இருந்தும், மின்தடையின் போது அது ஏன் இயக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து விளக்கம் கேட்க மின்சாரத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்ட போது அவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இது தற்செயலான மின்தடை அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட மின் துண்டிப்பு என்று குற்றம் சாட்டியுள்ள பாமகவினர், இந்த விவகாரம் தொடர்பாக மின்சாரத் துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையான புகாரை அளித்துள்ளனர்.

SATHISH R

Recent Posts

BREAKING: 7 முதல் 16 வயது சிறுமிகளுடன்… சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்…. போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்….!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

3 minutes ago

“கடல் பார்த்த ஆபீஸ் யோகமா?”…. ரூ.1,200 கோடி திட்டத்திற்குப் பின் இருக்கும் ஜோதிடக் காரணம்…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்….!

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…

13 minutes ago

பீகாரை அலறவிட்ட சம்பவம்… சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… என்கவுண்டரில் தூக்கிய அதிரடி போலீஸ்….!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…

22 minutes ago

அடேய் என்னடா பண்றீங்க…. ஒரே பைக்கில் 4 பேர்… தோள் மீது உட்கார்ந்து நடுரோட்டில் ஆபத்தான சாகசம்….. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…

30 minutes ago

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

35 minutes ago

“ஏ அள்ளு அள்ளு… ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது”…. நெடுஞ்சாலையில் பாய்ந்த பால் ஆறு…. ஓடோடி வந்து குடங்களில் அள்ளிய மக்கள்…. வைரலாகும் வீடியோ…!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…

43 minutes ago