உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும் இடையே வெறும் 100 ரூபாய் பணம் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நாளடைவில் இருவருக்கும் இடையே பெரிய குடும்பத் தகராறாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று அவதேஷ் மது அருந்திவிட்டு வந்து, தனது மனைவியை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அவரது மனைவி, கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்துள்ளார்.
அவதேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டாரும் உறவினர்களும், பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற மனைவி பிரியங்காவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…