கோவாவிலிருந்து டெல்லிக்குச் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை காலை 9:16 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டது. ஆனால், விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் இயந்திரத்தில் திடீர் பழுதடைவு ஏற்பட்டது. இதனைக் கண்ட விமானி உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, விமானத்தை யூ-டர்ன் செய்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திருப்ப முடிவு செய்தார்.
விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமான நிலைய நிர்வாகம், உடனடியாக உஷார்படுத்தப்பட்டு காலை 9:25 மணிக்கு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானியின் திறமையான வழிகாட்டுதலும் துரித நடவடிக்கையும் விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றின.
https://twitter.com/pulsenewsbreak/status/2094779471635284385/video/1
எந்தவித அசம்பாவிதமும் இன்றி, கோவா விமான நிலையத்தில் காலை 9:50 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்தபோது விமானத்தில் மொத்தம் 229 பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர்…
ஒடிசா மாநிலம் தேன்கனால் பகுதியைச் சேர்ந்த சனாதன் நாயக் (29) என்ற இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரெனக்…
தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டம், கொஸ்கி நகராட்சிக்குட்பட்ட போதிரெட்டிப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பெரும் சோக சம்பவம் ஒன்று…
ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ரஹன்கலான் கிராமத்தில், நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஜோடி ஒரே அறையில்…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும்,…