பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில், காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜகஜித் சிங் என்ற 20 வயது இளைஞர் அவரது இரு மைத்துனர்களால் பேருந்து நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஜகஜித்தும் ஜஷன் கௌரும் காதலித்து குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று ஜகஜித்தின் மாமியார் கிந்தர் கௌர், தன் வீட்டிற்கு வர விரும்புவதாகக் கூறி அவரைத் தரன் தாரன் பேருந்து நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு ஜகஜித் வந்தடைந்தபோது, மறைந்திருந்த அவரது மைத்துனர்களான ஜஸ்பிரீத் சிங் மற்றும் ஹர்பிரீத் சிங் ஆகியோர் கத்திகளால் அவரைச் சூழ்ந்து தாக்கியுள்ளனர்.
https://twitter.com/HateDetectors/status/2094760746689396928/video/1
அவர் சரிந்து விழுந்த பிறகும் விடாமல் தாக்கப்பட்டதில் ஜகஜித்திற்கு அறுபதுக்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்களில் குரிந்தர் சிங் என்பவர் துணிச்சலுடன் தலையிட்டு ஒருவரான ஜஸ்பிரீத் சிங்கை மடக்கிப் பிடித்த நிலையில், தப்பியோடிய மற்றொருவரைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன…
தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்து மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள விஜய்யை, தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்த இந்தியப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளியான புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் நிதிநிலை…
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் வைத்துப் பொதுப்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.…
பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில்…