2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. தவெகவின் எழுச்சியால் அதிமுக எதிர்க்கட்சித் அந்தஸ்தை இழந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்று முகாம்களுக்குத் தாவி வருகின்றனர். கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம், வேலுமணி தலைமையிலான கோஷ்டிகள் போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், தென் மாவட்ட அதிருப்தி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – அமமுக இடையே கூட்டணி வலுவாக இருப்பதாக வெளியில் பேசினாலும், சசிகலாவையும் தன்னையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரும் நோக்கில் தினகரன் மறைமுக நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதற்குச் சான்றாக எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் கூட சசிகலாவைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் கசிகின்றன. என்டிஏ கூட்டணியில் மீண்டும் செல்வாக்கு பெற முயலும் தினகரன், அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி அதிருப்தி நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுக்க முயல்வது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
வெளிப்படையாகக் கூட்டணியைப் பாராட்டிவிட்டு, உள்கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் தினகரன் செயல்படுவது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது. “கடந்த காலத் துரோகங்களை மறந்து 2026 தேர்தலில் அமமுகவைச் சேர்த்துக்கொண்டதால்தான் அவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ தொகுதியாவது கிடைத்தது; ஆனால், வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைப்பது போல் என்னையே வீழ்த்தப் பார்க்கிறார்கள்” என்று தனது ஆதரவாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது.
கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தினகரனின் இந்த மறைமுக உள்ளடி வேலைகள் கூட்டணி தர்மத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. சசிகலாவின் மீள்வருகை மற்றும் அமமுகவின் இந்தத் தலைகீழ் நகர்வுகளால், விரைவில் அதிமுக – அமமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிவடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதாகக் கட்சி ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "ஊழல்" என்ற…
மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒரு முனையிலான பெரும் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய இஸ்லாமிய…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களும் ராணுவ மோதல்களும் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், நிலைமை மேலும்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஒரு வரலாற்றுப்பூர்வமான தருணம் நிகழ்ந்தது. திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான…